News

    Our Sponsors

    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.


    ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


    [Thirukkural]
    இறைநிலை விளக்கம்!

    பிரபஞ்சத்தில் காணப்படும் தோற்றங்கள் அனைத்திற்கும் மூலமாக உள்ளது தூயவெளியே ஆகும். அதை ஆதி, பிரம்மம், கடவுள், இறைநிலை, பூரணம், பிதா, அல்லாஹ் என்று பல பெயர்களால் அழைக்கின்றோம்.

    இறைநிலையே தன்மாற்றத்தால் இறைத்துகளாகி, விண்முதலான பஞ்சபூதங்களாகி, உலகமாகி, உயிரினங்களாகி, ஆறாவது அறிவு படைத்த மனிதனாகவும் வந்துள்ளது, என்று உணரும்போது அந்நிலையில் காணுகின்ற காட்சி யாவும் இறைக்காட்சியே ஆகும்.

    எவ்வுயிரும் இறைநிலையின் தன்மாற்றமே என்ற தெளிவில் யாருக்கும் துன்பம் செய்யாமலும், துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும், என்ற ஈகை உணர்வும் இயல்பாக உண்டாகின்றன. இத்தகைய வாழ்வே அன்பும் கருணையும் இணைந்த அறவாழ்வாகும். அதுவே மனித இனப் பண்பாடாகும். செயலுக்கேற்ற விளைவை, இயற்கை துள்ளியமாக அளிக்கும் ( for every action has got an equal and opposite reaction ) இறைநியதியை அறிந்து கொண்டு, எல்லோரும் அதன்வழி செயல்பட்டு இன்புற்று வாழும் பழக்கம் இப்பண்பாட்டால இயல்பாகிறது. இதனால் ஆன்மா தூய்மை அடைகிறது.

    இத்தகைய சிறந்த அறிவு பெற உதவுவதே இறைநிலை விளக்க வகுப்புகளாகும். இதனால் பொருள் வளமும், அருள் வளமும் ஓங்கி உலகெங்கும் அமைதி நிலவும். இதுவே மனிதப் பிறவியின் நோக்கமும், அவசியமும் ஆகும். நன்றி.

    Our Sponsors